IPB

Welcome Guest ( Log In | Register )

15 Pages V « < 13 14 15  
Reply to this topicStart new topic
> உராய்வு
Eelavan
post Nov 17 2005, 05:11 AM
Post #281

Group: Members
Posts: 1,073
Joined: 27-January 04
From: Singapore
Member No.: 278யாக்கை திரி
காதல் சுடர்

ஞாபகத்திற்கு வந்தாலும்

சஞ்சீவின் தனித்தன்மையான கவிதை.நன்றி சோழியன் அண்ணா


--------------------
\"தங்கத்தமிழும் தமிழீழ மண்ணும் எங்கள் இருவிழிகள்\"
User is offlineProfile CardPM
Go to the top of the page
+Quote Post
இளைஞன்
post Nov 17 2005, 08:12 AM
Post #282

Group: Members
Posts: 1,056
Joined: 7-June 03
From: Germany
Member No.: 24நன்றி சோழியான் அண்ணா, ஈழநாதன்...

"யாக்கைத் திரி" க்கு முதல் எழுதப்பட்ட கவிதை smile.gif
யேர்மனியில் உள்ள இளைஞர் மன்றம் நடாத்திய
நிகழ்வொன்றிலும் படிக்கப்பட்டது.


--------------------
நட்புடன்
புதியதோர் உலகம் செய்வோம்
இளைஞன்
User is offlineProfile CardPM
Go to the top of the page
+Quote Post
Eelavan
post Nov 17 2005, 10:40 AM
Post #283

Group: Members
Posts: 1,073
Joined: 27-January 04
From: Singapore
Member No.: 278அப்ப உங்களைக் கவிக்கூர் என்றது மெத்தச் சரி.


--------------------
\"தங்கத்தமிழும் தமிழீழ மண்ணும் எங்கள் இருவிழிகள்\"
User is offlineProfile CardPM
Go to the top of the page
+Quote Post
Nithya
post Nov 17 2005, 12:52 PM
Post #284

Group: Members
Posts: 59
Joined: 16-August 05
Member No.: 1,486QUOTE(sOliyAn)

முரண்படு  
முட்டிமோது
உடன்படு
ஒட்டி உரசு
திறன்படு
தீர அனுபவி.செயற்கரிய செயல் அது, செயற்படு பொருள்.
இக்கவிதை நிச்சயமாய் எல்லோர் மனத்திலும் முட்டி மோதி இருக்கும்.
நான் தீர அனுபவித்த கவிதைகளில் இதுவும் ஒன்று.
என்னுள் நுளைந்து செயற்பட்ட கவிதை. இக்கவிதை
செயற்பட்டு பொருளை உணர்த்திற்று. மிகச்சிறந்த்த படைப்பு.


--------------------
என்றும் அன்புடன்
நித்தியா
User is offlineProfile CardPM
Go to the top of the page
+Quote Post
Rasikai
post Nov 17 2005, 06:35 PM
Post #285

Group: Members
Posts: 4,247
Joined: 22-July 05
Member No.: 1,431செயற்படு பொருள் கவிதை பலமுறை வாசிக்கத் தூண்டுகிறது. எத்தனை உண்மைகளை இயல்பாக சின்னச் சின்ன கவி வரிகளுக்குள் சொல்லி முடித்திருக்கிறார் இளைஞன்.


--------------------
உனக்கெது சொந்தம் .. எனக்கெது சொந்தம்.. உலகத்துக்கெதுதான் சொந்தமடா!!
User is offlineProfile CardPM
Go to the top of the page
+Quote Post
sinnakuddy
post Nov 17 2005, 06:47 PM
Post #286

Group: Members
Posts: 497
Joined: 1-August 05
Member No.: 1,456எழுவாய் பயனிலை செயப்படுபொருள என ஒத்த கருத்தோடை இருக்கிறதாலை பிரச்சனைக்கு இடமில்லை laugh.gif laugh.gif
User is offlineProfile CardPM
Go to the top of the page
+Quote Post
Birundan
post Nov 20 2005, 04:09 AM
Post #287

Group: Members
Posts: 1,885
Joined: 8-August 05
From: Germany
Member No.: 1,469QUOTE(sinnakuddy)
எழுவாய் பயனிலை செயப்படுபொருள என ஒத்த கருத்தோடை  இருக்கிறதாலை பிரச்சனைக்கு  இடமில்லை laugh.gif  :lol:


சின்னக்குட்டிஅண்ண உங்களுக்கு என்ன ம++பே? ஒரு வசனத்தில் இருக்கும் எழுவாய், பயனிலை, செய்யப்படு பொருள் எல்லாம் ஒத்தகருத்தோ? தோன்றாஎழுவாய் கூட வரும் தெரியுமோ? tongue.gif tongue.gif tongue.gif


--------------------
நீ முதலில் உன்னை திருத்திக்கொள் சமுதாயம் தானாகத்திருந்தும்.

அன்புடன் பிருந்தன்.
User is offlineProfile CardPM
Go to the top of the page
+Quote Post
sinnakuddy
post Nov 20 2005, 09:25 PM
Post #288

Group: Members
Posts: 497
Joined: 1-August 05
Member No.: 1,456மோனை பிருந்து....கொஞ்சம் துள்ளாமால் கொஞ்சம் பறக்கமால் ஒரு இடத்தில் நினறு கேள்... எதோ பண்டித விளக்கம் சொல்ல வந்திட்டீர்...இந்த மந்தி சின்னக்குட்டி எந்த மப்பென்றாலும் கொப்பிழக்க பார்க்காது கண்டியோ....கேள்வியின் நாயகனோடை சிலேடையாய் லொள்ளு பண்ணினான் ...அவ்வளவு தான்..... laugh.gif
User is offlineProfile CardPM
Go to the top of the page
+Quote Post
Birundan
post Nov 20 2005, 10:13 PM
Post #289

Group: Members
Posts: 1,885
Joined: 8-August 05
From: Germany
Member No.: 1,469[quote=sinnakuddy]மோனை பிருந்து....கொஞ்சம் துள்ளாமால் கொஞ்சம் பறக்கமால் ஒரு இடத்தில் நினறு கேள்... எதோ பண்டித விளக்கம் சொல்ல வந்திட்டீர்...இந்த மந்தி சின்னக்குட்டி எந்த மப்பென்றாலும் கொப்பிழக்க பார்க்காது கண்டியோ....கேள்வியின் நாயகனோடை சிலேடையாய் லொள்ளு பண்ணினான் ...அவ்வளவு தான்..... laugh.gif[/quote]

சரி அப்பு செய்வினை இருக்கு, பயனிலை இருக்கு, எழுவாய் எங்க இருக்கு அப்பு, அதுதான் நான் சொன்னேன் தோன்றாஎழுவாய் இருக்கு என்று. 8) 8) 8)

அல்லது உங்களுக்கு ஆராவது செய்வினை செய்து போட்டினமோ? tongue.gif tongue.gif tongue.gif


--------------------
நீ முதலில் உன்னை திருத்திக்கொள் சமுதாயம் தானாகத்திருந்தும்.

அன்புடன் பிருந்தன்.
User is offlineProfile CardPM
Go to the top of the page
+Quote Post
வெண்ணிலா
post Mar 19 2006, 03:16 PM
Post #290

Group: Members
Posts: 4,986
Joined: 22-June 04
From: தாயகம்
Member No.: 430என் பார்வையில் சிக்கிய உராய்வு

நீண்ட கால ஆவல் இன்றுதான் தணிந்தது.
உராய்வு அழகான அட்டையில் வித்தியாசமான எழுத்தில் உராய்வு என தலைப்பிட்ட ஓர் அழகான இதழ். என் கையில் கிடைத்ததும் ஒவ்வோர் பக்கத்தையும் மென்மையாக புரட்டினேன். (புது புத்தகம் எல்லோ அதுதான்)
"அன்புடன்" கி பி அரவிந்தன் எழுதியதையும் "உராய்வுடன்" கவிஞன் சஞ்சீவ்காந்த் தன்னை அறிமுகப்படுத்திய விதமும் "நன்றியுடன்" அனைவருக்கும் நன்றி செப்பிய விதமும் என்னை வியப்பில் மூழ்க வைத்தது. தனிமையில் யாருடைய தொந்தரவும் இன்றி வாசிப்பதற்காக மாமர நிழல் தேடி சென்று மரத்தடியில் அமர்ந்தேன். இளந்தென்றல் எனை வருடிச்செல்ல உராய்வுடன் ஐக்கியமானேன்.

1) வருக 2004

இரண்டாயிரத்து மூன்றின்
எதிர்காலமே...
இரண்டாயிரத்து ஐந்தின்
இறந்தகாலமே...
வருமாண்டில் நீ என்ன செய்வாய்?

கல்லறைகள் காணும்
பதுங்குகுழிகள் மூடு
ஆயுதங்களை உறங்க வைஇப்படியான பல வரிகளை உள்ளடக்கிய முதல் கவிதை அருமையோ அருமை.

2) தமிழழகு

அழகாக சிலேடைச் சொற்களை பொருத்தி தமிழுக்கு அழகு சேர்த்து கவிதைக்கு தமிழழகு என தலைப்பிமிட்டு அழகான மூனாவின் படமுமிட்டு அழகாக வடித்த கவிதையே தமிழழகு. இக்கவியை நான் வாசித்தேன் என பெருமை கொள்வதை விட வாசிக்காதோருக்காக கவலைப்படுறேன்.

3) கடிதம்.
கடிதம் என தலைப்பிட்டு எழுதிய கவிதை நன்று.
அன்புள்ள தாயகமே...
ஆசைமகன் எழுதும் மடல்
நான் இங்கு நலமம்மா
நீயங்கு நலம்தானா?


வாசிக்கும் போது என்னை அறியாமல் என் கண்ணில் கண்ணீர்.இக்கவிதையில் உள்ள கவிஜனின் சிந்தனையை சொல்லி புரிய வைக்க முடியாது. இதையும் வாசித்தால் தான் புரியலாம். மூனாவின் ஓவியம் இன்னும் கவிதைக்கு மெருகூட்டுகின்றது.

4) விடுதலையின் பங்குதாரர்
இதுவும் ஓர் சிலேடையுடன் கூடிய அழகான கவிதை. தமிழீழ கவிதை.
சுட்டெரிக்கும் சூரிய வீரர்
துட்டர் படை கொன்ற வீரர்
விட்டெறியும் வேலாய் வீரர்
எட்டிப்பகை வென்ற வீரர்


இப்படியான தொனியில் அமைந்த இக்கவிதையும் அருமை. நன்றி கவிஞனே.

5) அரிச்சுவடி , பெரியார், சிற்பி, திலீபன் ., காந்தி , பூமிப்பந்து
இத்தலைப்பில் அமைந்த் ஹைக்கூ கவி வரிகளும் இனிதே.

6) கடவுள்

நாதியற்று வாழும் நம்மவர்க்கு நாளும்
சோறுமே இல்லையடா
நாள்தோறும் இந்த வெற்று சிலைக்கு
பூசைகள் ஏதுக்கடா?


ஆகா தினமும் கடவுளை மனதார பூஜிக்கும் எனக்கே கடவுள் கவிதையை வாசித்ததும் சிந்தனை வந்தது. ஆமா ஏன் தான் நான் கடவுளை வணங்குறேன் என்று. :cry:


7) கவிதை
இளைஞன் தனது கவிதையின் பிறப்பை இக்கவிதையில் இனிமையாக வடித்திருக்கிறார்.

நல்லதை எடுத்துப் பதமாக்கி
இனிப்பிட்டு இளக வைத்து
மென்றுண்டு சுவைத்தால்
கக்கி விடுவேன்.


வாவ் அருமை. நன்றி கவிஞனே.

8) விருப்பு வெறுப்பு

இக்கவி வாசிப்போரை வெறுக்காமல் விருப்பம் கொள்ளக்கூடிய மாதிரி எழுதி இருக்கிறார்
புலியை வெறுப்பவள் புலியை விரும்புபவனை அணைப்பது போல ஒரு கவிதை. வாசித்தால் விருப்பம் வரும் இக்கவி மீதும் கவிஞனின் சிந்தனை மீதும்.

9) இவள் யாரோ

இக்கவி வாசித்ததும் நட்பை சுவாசிகும் எனக்கு அழுகையே வந்தது. காமத்திலான இப்பிரபஞ்சத்தில் நட்பை தூய்மையாக வைத்திருப்போர் எண்ணிக்கை குறைவானதே. ஆனால் இக்கவிஞனோ மின் வழியில் சந்தித்து அன்பு கொண்ட வார்த்தைகளை பரிமாறி அவளே தன் தோழி என அழகாக சொல்லி இருக்கிறார். வாழ்க உங்கள் நட்பு. நட்பை கொச்சைப்படுத்தும் :evil: :cry: இவ்வுலகில் உங்களது நட்பாவது தழைத்தோங்க வாழ்த்துகிறேன்.


10) வர்ணிக்க தோன்றுதே
பதினெட்டு வயது
பவனி வரும் அழகு....

வர்ணிக்க தோன்றும்
வஞ்சியிவள் மேனி
வள்ளல் மொழி எதுவோ
வார்த்தைகள் தாரும்


இக்கவிஞனுக்கே வஞ்சிவள் மேனியை வர்ணிக்க வார்த்தைக்கு பஞ்சம் ஏற்பட்டு விட்டதே. அடடடா வஞ்சியவளின் சிற்றிடை போல பெண்ணவளின் வர்ணிப்புக்கான கவிதையையும் சிறிதாக்கி அருமையாக வர்ணித்திருகிறார் கவிஞன். நன்றி


11)பிறந்தநாள் பரிசு
முதல் கவியில் வர்ணிக்க சொல் இலை என பஞ்சம்கொட்டிய கவிஞன் இத்தலைப்பின் கீழ் அமைந்த கவிதையில் பெண்ணவளை ஆழமாக வர்ணனை செய்துள்ளார்.
உன் சின்னக் கழுத்து
புதிய தொழில்நுட்பத்தின் படைப்பு
உன் விரிந்த மூக்கு
யூப்பிட்டரில் பூத்த மொட்டு


இப்படியாக தொடர்கிறது இனிமையான வர்ணனை.

ஆகா அருமைஅருமை.
நேரம் போதாமையினால் தொடர்ந்து எழுதமுடியாமைக்கு வருந்துகிறேன். ஏனைய கவிதைகளுடன் மீண்டும் சந்திக்கும் வரை உங்களிடம் இருந்து வெண்ணிலா................. tongue.gif


--------------------
-----வெண்ணிலா-----
User is offlineProfile CardPM
Go to the top of the page
+Quote Post
RaMa
post Mar 20 2006, 12:31 AM
Post #291

Group: Members
Posts: 2,495
Joined: 23-August 05
Member No.: 1,500உங்கள் விமர்சனத்திற்கு நன்றி நிலா..
நானும் உராய்வை எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றேன்.


--------------------
நிழல்களின் ஒப்பந்தங்களை விட
நிஐங்களின் போராட்டமே சிறந்தது
User is offlineProfile CardPM
Go to the top of the page
+Quote Post
இளைஞன்
post Mar 24 2006, 11:43 PM
Post #292

Group: Members
Posts: 1,056
Joined: 7-June 03
From: Germany
Member No.: 24நன்றி வெண்ணிலா.
கவிதைத் தொகுப்பை வாசித்து
உங்கள் கருத்துக்களை எழுதியமைக்கு நன்றி.

ரமா விரைவில் உங்கள் கருத்துகளையும்
எதிர்பார்க்கிறேன். எழுதுங்கள்.


வரும் 19.04.2006 அன்று பிரான்சில் அறிமுக நிகழ்வு இடம்பெயற உள்ளது.
அதுபற்றிய விபரம் இதோ:

user posted image


--------------------
நட்புடன்
புதியதோர் உலகம் செய்வோம்
இளைஞன்
User is offlineProfile CardPM
Go to the top of the page
+Quote Post
இளைஞன்
post Apr 6 2006, 06:46 PM
Post #293

Group: Members
Posts: 1,056
Joined: 7-June 03
From: Germany
Member No.: 24வணக்கம்,
சிலம்பு அமைப்பு ஒழுங்கமைத்துள்ள "இன்னிய மாலை" நிகழ்வு வரும் ஞாயிற்றுக்கிழமை பாரிசில் நடைபெற இருக்கிறது. பிரான்சில் வசிக்கிற யாழ்கள உறவுகளையும் நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறேன்.

user posted image


--------------------
நட்புடன்
புதியதோர் உலகம் செய்வோம்
இளைஞன்
User is offlineProfile CardPM
Go to the top of the page
+Quote Post
stalin
post Apr 6 2006, 08:07 PM
Post #294

Group: Members
Posts: 564
Joined: 24-February 05
Member No.: 1,119லண்டன் நிகழ்வு போல பாரிஸ் இல் நடைபெறும் விழாவும் வெற்றி பெற வாழ்த்துக்கள்..................................


--------------------
தோழமையுடன் ஸ்ராலின்
User is offlineProfile CardPM
Go to the top of the page
+Quote Post
sinnakuddy
post Apr 13 2006, 02:22 PM
Post #295

Group: Members
Posts: 497
Joined: 1-August 05
Member No.: 1,456என்னடாப்பு....உந்த நிகழ்ச்சி லண்டனிலை...நடந்த மூட்டம்...களத்தில் எடுப்பு எடுத்தெண்டு இருந்தியள்...... பரிஸிலை நிகழ்ந்த நிகழ்ச்சி பற்றி ஒரு அசுமாத்தத்தையும் காணல்லை...எழுதுவும் காணல்லை போட்டாக்களையும் காணலை........அது சரி..லண்டண்,லண்டன் தான்...


--------------------
அன்புடன் சின்னக்குட்டி http://sinnakuddy.blogspot.com
User is offlineProfile CardPM
Go to the top of the page
+Quote Post
Mathuran
post Apr 19 2006, 12:19 PM
Post #296

Group: Members
Posts: 1,282
Joined: 14-December 04
From: நோர்வே
Member No.: 890நிகள்வு இனிதே நடந்தேற வாழ்த்துக்கள். smile.gif


--------------------
[size=12]பூவால் காம்புக்கு பெருமை அல்ல.
காம்பினால் பூவுக்குத்தானே பெருமை.

அன்புடன் மதுரன்


http://www.seeynilam.tk/
User is offlineProfile CardPM
Go to the top of the page
+Quote Post
கறுப்பி
post Apr 20 2006, 05:59 AM
Post #297

Group: Members
Posts: 158
Joined: 11-January 06
From: லண்டன்
Member No.: 2,070நிகழ்வு இனிதே நடந்தேறி விட்டது மதுரன்.


--------------------
kaRuppi
User is offlineProfile CardPM
Go to the top of the page
+Quote Post
Mathuran
post Apr 20 2006, 08:27 AM
Post #298

Group: Members
Posts: 1,282
Joined: 14-December 04
From: நோர்வே
Member No.: 890ஓஓ கவனிக்கவில்லை. சுட்டி காட்டியமைக்கு நன்றிகள்


--------------------
[size=12]பூவால் காம்புக்கு பெருமை அல்ல.
காம்பினால் பூவுக்குத்தானே பெருமை.

அன்புடன் மதுரன்


http://www.seeynilam.tk/
User is offlineProfile CardPM
Go to the top of the page
+Quote Post
agathyan
post Apr 20 2006, 03:35 PM
Post #299

Group: Members
Posts: 13
Joined: 18-December 03
Member No.: 243இந்த நிகழ்வு தொடர்பான பதிவு அப்பால் தமிழில் வெளிவந்துள்ளது. இதனை நன்றியுடன் இணைக்கிறேன்.
-துடிப்பான இளைஞர்களது நல்வெளிப்பாடுகள் மக்களால் ஏற்றுக் கொள்ளப்படும் என்பதற்கு இது ஒரு சான்று.

அகதியன்

பிரான்ஸ் சிலம்பு அமைப்பினர் ஏற்பாடு செய்த 'இன்னியமாலை' பார்வையாளர்களை ஈர்த்த மாலையாக அமைந்தது. 09-04-2006 ஞாயிறு அன்று பாரிசில் இரண்டு பிரிவுகளை கொண்டதான இம்மாலை இரு பிரதான நிகழ்வுகளை உள்ளடக்கியிருந்தது. ஆடம்பரமோ ஆரவாரமோ இல்லாத இந்நிகழ்வு வந்திருந்தோரின் விழிகளை விரியப்பண்ணி வியக்க வைத்தது. கண்காட்சியாக விரிக்கப்பட்டிருந்த அரிய சேகரிப்புகளான நாணயங்கள் முத்திரைகள் பத்திரிகைகள் என்பவற்றை யேர்மனியில் வாழும் நம்மவர் ஒருவர் சேகரித்து வருகிறார் என்பதே அவ்வியப்பிற்குரிய காரணமாகும். எம்மவர் நிகழ்வுகள் அகவணக்கத்துடன் ஆரம்பிப்பது வழமை. அதுபோலவேதான் அன்றும் அகவணக்கம் மக்கள விளக்கேற்றல் என்ற ஆரம்ப விழிமியங்களுடன் ஆரம்பித்தது. மேற்படி இன்னிய மாலை நிகழ்வினை சிலம்பு அமைப்பின் செயலாளர் திரு க.முகுந்தன் அவர்களும் துணைச் செயலாளர் செல்வன் பிரசாந்தும் இணைந்து தமிழிலும் பிரெஞ்சிலும் தொகுத்து வழங்கினர். சிறப்புவிருந்தினராக கலந்து கொண்ட நகரசபை உறுப்பினரும் தமிழ் சமூக ஆர்வலருமான திரு.அலன் ஆனந்தன் கண்காட்சியை திறந்து வைத்து இன்னிய மாலைக்குள் அழைத்துச் சென்றார். அவர் தனது உரையில் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்து இளைஞனான அன்ரனின் தனித்த உழைப்பினால் சேகரிப்பட்டவற்றை காண்கையில் மெய் சிலிர்க்கினறது. இவற்றின் பெறுமதி கணக்கிட முடியாதவை. ஈழத்தமிழர்கள் தம்மால் எதனையும் சாதிக்க முடியும் என்பதற்கு இது சான்றாக இருக்கின்றது எனப் புகழ்ந்துரைந்தார். கண்காட்சியை பார்வையிட்டவர்கள் கேட்ட சந்தேகங்களுக்கு அன்ரன் பதிலிறுத்தார்.

கண்காட்சியில் பண்டைய நாணயங்கள், தாள் காசுகள் என்பனவும் தபால் முத்திரைகள்இ முதல்நாள் உறைகள் என்பனவும் பத்திரிகைகள் சஞ்சிகைள் மற்றும் கருத்துச் சித்திரங்கள் என்பற்றின் தொகுப்பும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

அதன்பின் அப்பால் தமிழ் இணைத்தளத்தின் நெறியாளர் கி.பி.அரவிந்தன் கண்காட்சியில் வைக்கப்பட்டிருப்பவற்றில் அரிய நாணயங்கள் பற்றி எடுத்துரைத்தார். அவரது எடுத்துரைப்பில் யாழ்பாண அரசு காலத்திய நாணயங்கள் இருப்பதையும் ஒல்லாந்து கால நாணயங்கள் இருப்பதையும் சுட்டிக்காட்டியதுடன் ஐந்து சதம்இ பத்து சதம் என்பவை நாணயங்களாக இல்லாது தாள்களாக இருப்பதையும் சுட்டிக்காட்டினார். அத்துடன் அன்ரன் அவர்களையும் அறிமுகம் செய்து வைத்து அன்ரனை உரையாற்றும்படி கேட்டுக்கொண்டார். அன்ரன் தனது உரையில் தான் பொழுதுபோக்காக தொடங்கிய இந்த சேகரிப்பு இன்று பலரையும் ஆச்சரியப்பட வைத்திருப்பது தனக்கு மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் தருவதாக கூறினார். அத்துடன் தனது பெற்றோர் சகோதரர்கள் துணைவியார் தந்த ஒத்துழைப்பும் ஆதரவுமே தொடர்ந்து இதில் ஈடுபட வழிவகுத்தது என்றும் அவ்வகையில் அவர்களுக்கு தான் நன்றி கூறுவதாகவும் தெரிவித்தார். மேலும் அவர் தனது சேகரிப்புகள் தனக்குப்பின் யாழ்பாண நுலகத்திற்கு வழங்க விரும்புவதாகவும் உணர்ச்சி வசப்பட கூறினார்.

அடுத்த நிகழ்வாக சஞ்சீவ்காந்தின் உராய்வு கவிதை நூல் அறிமுகம் இடம்பெற்றது. இதனை கவிஞரும் ஈழமுரசு ஆசிரியர் குழுவைச் சேர்ந்தவருமான மாணி.நாகேஷ் அறிமுகம் செய்துவைத்தார். அவர் தனது அறிமுக உரையில் 12வயதில் சிறுவனாக யேர்மனிக்கு வந்தடைந்த சஞ்சீவ்காந்த் அந்நியமொழிக் கல்விச் சூழலிலும் தமிழில் கவிதை எழுத முனைந்தனை பாராட்டினார். இந்த தலைமுறையினர் தமிழில் எழுதுவதையும் சிந்திப்பதையும் நாம் உற்சாகப்படுத்த வேண்டியது கடமை என்றும் சுட்டிக்காட்டினார். வளரும் இளந்தலைமுறையினர்க்கு இவரொரு முன்மாதிரியாக விளங்குகிறார் என்றும் புகழ்ந்துரைத்தார். சஞ்சீவ்காந் தனது ஏற்புரையில் கவிதை பற்றிய விமர்சனங்களை தயங்காது முன்வைக்கும்படியும் அதுவே தன்போன்றோர் வளர உதவும் என்றும் வேண்டுகோள் விடுத்தார். அவருடைய உராய்வு கவிதை நூலை பார்வையாளர் வரிசையில் நின்று வாங்கிச் சென்றதுடன் கவிஞரான அந்த இளைஞனின் கையெழுத்தை நூலில் வாங்குவதிலும் ஆர்வம் காட்டினர்.

எமது பண்டைய கலையான நாட்டுக்கூத்தின் ஒருபகுதியான வரவேற்புக்கூத்து ஒன்று ஆனந்தன் குழுவினரால் நிகழ்த்தப்பட்டது. அதன்பின் எம்மிடையே புரையோடிப்போன சாதியம் வெளிப்படும் முறையையினை அம்பலப்படுத்தும் எம்.அரியநாயகத்தின் 'விளம்பரம்' என்ற ஓரங்க நாடகம் கலைஞர்கள் இரா.குணபாலன் மற்றும் லீனா ஆகியோரின் நடிப்பில் மேடையேறியது. திருவாளர்கள் ஒகஸ்ரின்இ பீ்ற்றர் ஆகியோரின் பாட்டும் பாவமும் என்ற நிகழ்வும் நடாத்தப்பட்டது.

இரண்டாவது அரங்கான திரையிடலில் இன்னிய அணி பற்றியதான விவரணமும்இ கிச்சான்இ பேரன்பேர்த்தி ஆகிய குறும்படங்களும் காண்பிக்கப்பட்டன. இந்நிகழ்வில் சிறப்புரையாற்ற இருந்த கிழக்கு பல்கலைக்கழகத்தின் நுண்கலைத்துறை பீடாதிபதி பாலசுகுமார் இலங்கையில் இருந்து வந்து சேராமையால் நிகழ்ச்சி நிரலில் குறிப்பிட்டபடி சிறப்புரை இடம்பெறாது என்பதற்கான வருத்தத்தினை க.முகுந்தன் சபைக்கு தெரிவித்தார்.

-சிவலிங்கம் சிவபாலன்
நன்றி: அப்பால்-தமிழ்


பிகு: ஈழமுரசு (101) இதழிலும் பதிவாகியுள்ளது
User is offlineProfile CardPM
Go to the top of the page
+Quote Post

15 Pages V « < 13 14 15
Reply to this topicStart new topic
1 User(s) are reading this topic (1 Guests and 0 Anonymous Users)
0 Members:

 Lo-Fi Version Time is now: 20th November 2017 - 11:25 PM


The comments are owned by the poster. We aren't responsible for their content.